கோவை விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (6) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா(8) ஆகியோர் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர். இருவரும் சறுக்கு விளையாட முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல் […]

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுல பயணிகள் குளிப்பதற்கு 7 நாள்களுக்கு பிறகு   அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக நீக்கி கொள்ளப்படுவதாகவும், பேரருவியில் இன்று(மே24) பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா். பழைய குற்றாலம் அருவியில் இன்று காலை 6 முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.“கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவே 9 மணிக்கே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாருடன் மரண வாக்குமூலம் மற்றும் குடும்பத்துக்காக எழுதிய இரண்டு கடிதங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.மரண வாக்குமூலம் கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், […]

கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்ட சூறைக் காற்று காரணமாக, தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.மேலும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் சில மாதங்களுக்கு முன்பாக திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினா். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி  மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆலையை தாற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் இது தொடா்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில்,  […]

விழுப்புரம் திரு.வி.க. நகரில்லுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்  போலீசார் சோதனை நடத்தினர்.ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் 40 முதல் 50 பத்திரப் பதிவுகள் நடைபெறும் நிலையில், கூடுதலாக பணம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திங்கள்கிழமை(மே 20) இரவு துணைக் கண்காணிப்பாளர் சத்திய […]

ஆதித்யா பிர்லா குழுமம் 80 ஆயிரம் கோடி ரூபாயில் இந்திய அலங்கார வண்ணபூச்சுக்கள் சந்தையில் “பிர்லா ஓபஸ்” என்ற பெயரில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் முதலீடு செய்து உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயில் நாடு முழுவதும் ஆறு உற்பத்தி நிறுவனங்களை நிறுவுவது எக்கோலாக பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி பெயிண்ட் பிராண்டுகளில் ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ள பிர்லா ஓபஸ், 145 […]

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்துக்கு அதி கனமழைக் காரணமாக  சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் அம்மாவட்ட மக்களுக்கு  குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைக்கு  சுற்றுலா செல்லும் […]

தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்துக்கு இன்றும்(மே 19), நாளையும்(மே 20) மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், மேகமலை அருவிக்கு 3 நாள்களுக்கு (மே 21 வரை) செல்வதற்கு  தடை விதித்து அம்மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியம் ரூ.294 இல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மத்திய அரசு அறிவிப்பை […]