
புதுவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 150 பேர், தங்கள் நலன்களை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 18.11.2024 முதல் தொடங்கிய இந்த போராட்டம், இன்று (19.11.2024) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கே.பி.ஆர். ராஜேஸ்வரி பெருமாள்ராஜா அவர்கள், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களிடம் மனு அளித்து கைதிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை தெரிவித்தார்.
கைதிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
1. சுத்தமான குடிநீர் வழங்கல்
2. சுகாதாரமான கழிப்பிடம் ஏற்பாடு
3. 24 மணி நேர மருத்துவ வசதி
4. தரமான உணவு வழங்கல்
5. உறவினர்களுடன் பாரோல் மூலம் சந்திக்க அனுமதி
6. உழைப்புக்கு சரியான ஊதியம்
7. அணிய உடைகள் வழங்கல்
8. இட நெருக்கடியை தவிர்த்தல்
9. திறமையான மற்றும் நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்
சிறை கைதிகள் இதுவரை எதிர்கொண்ட குறைபாடுகளை நிவர்த்திக்க கோரியும், அவர்கள் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடக்கிறது.
மேலும், நீதிமன்ற காவலில் இருக்கும் விசாரணை கைதிகளை சிறை காவலர்கள் அடித்து துன்புறுத்தி, சமைக்க சொல்கின்றனர் என்று விசாரணை கைதிகளின் உறவினர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் கைதிகளின் குறைபாடுகள் தீர்க்கப்படுமா? அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? புதுவை மத்திய சிறை நிர்வாகம் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.