
டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மே 5க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…
புதுடெல்லி: தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் (C-DOT) டெக்னீசியன் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CDOT/HR/REC/2025/02/01பணி: டெக்னீசியன்மொத்த காலியிடங்கள்: 29சம்பள விவரம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
தகுதி:மெக்கானிக்கல், தகவல் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:எழுத்துத் தேர்வும், திறன்தேர்வும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களே பணி நியமனத்திற்கு பரிந்துரைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:விருப்பமுள்ளவர்கள் www.cdot.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்...