இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா…

IMG WA jpg

கோவை ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் கல்லூரியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி அளித்திட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நெக்ஸ்ட் ஜென் கேரியர் எனும் புதிய ஆய்வகம் திறப்பு விழா கண்டது ரத்தினம் கல்விகுழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமையில் நடைபெற்றது.

img 20241111 wa00268630724921881898145 | இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா...
img 20241111 wa00276086945164078621831 | இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா...


இந்நிகழ்ச்சியில் பன்னாட்டுநிறுவனமான சிகிச்சின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் கியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்துவைத்தார்.


இது குறித்து இரத்தினம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் அவர்கள் கூறுகையில், இரத்தினம் கல்வி குழுமமானது நவீன காலத்திற்கு ஏற்றவாறும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் மாணவர்களை தயார் செய்யும் திறன்மிக்க கல்விக் குழுமம் ஆகும். இன்றைய மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியை வழங்குவதோடு நின்றுவிடாமல், இன்றைய நவீன காலகட்டத்திற்கு தேவையான துறை சார்ந்த அறிவையும், திறன்களையும் திறம்பட அளித்து அவர்களை வழியில் வெற்றிபெற வைக்கிறது.
அந்த வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்  சர்வதேச தரத்தில் பயிற்சி அளித்திட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நெக்ஸ்ட் ஜென் கேரியர் என்ற ஒரு பெயரில் புதிய ஆய்வக அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ஆய்வகத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. நவீன தொழில்நுட்ப துறைகளில் செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், தரவு அறிவியல் போன்றவற்றில் பயிற்சியளித்து அவர்களின் கற்றல் திறமையை மேம்பட செய்வதாகும். உலகின் தலைசிறந்த நிறுவங்களான ஐபிஎம், மைக்ரோசாப்ட் மற்றும் கோர்ஸ் இரா போன்றவற்றின் சான்றிதழ் படிப்புகளை ஆசிரியர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் வழங்கி ஆசிரியர்களின் தரத்தை உலக அளவில் தலைசிறந்த தொழிநுட்ப வல்லுனர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். குறிப்பாக நிறுவனத்தின் தரவு அறிவியலின் வல்லுநர் சான்றிதழும் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸுர் ஏஐ  ஃபண்ட்மெண்டல்ஸ் சான்றிதழும் பயிற்று விக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் இரத்தினம்  கல்விக் குழுமங்களின் இயக்குனர்  சீமா செந்தில், இரத்தினம்  கல்விக் குழுமங்களின் செயல் அதிகாரி முனைவர்.R.மாணிக்கம், இரத்தினம்  கல்விக் குழுமங்களின் தலைமை வணிக அதிகாரி முனைவர்.பா.நாகராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்…

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

100 ரேசன் கடைகள் முன்பு 100 நாட்கள் போராட்டம்...

Wed Nov 13 , 2024
பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் ராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் அறிவித்த 100 நாட்கள் 100 ரேஷன் கடைகளில் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரியும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணையை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடை […]
IMG WA jpg