Tuesday, July 8

காற்று மாசுபடுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு – நாப்கான் வாக்கத்தான்…

கோவையில் நாப்கான் மாநாட்டின் ஒரு பகுதியாக, சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது..

கோவையில் நுரையீரல் நோய்கள் தொடர்பான நாப்கான் எனும் தேசிய மாநாடு நவம்பர் 21 துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நடைபெற்றது. நாப்கான் 2024 மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன் குமார், தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்ச்சியில்,கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்கத்தானை துவக்கி வைத்தார்.

WhatsApp Image at AM
WhatsApp Image at AM

இதில் நாப்கான் மாநாட்டின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன், லூபின் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஹிராக் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த வாக்கத்தானில் மருத்துவர்கள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமீப காலமாக நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி நடைபயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிக்க  இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு .

குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதோடு, காற்று மாசுபடுவதை தடுக்க பொதுமக்களும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்கத்தான் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் கவுர், நிகில் சரங்தர்,நாகராஜன், ஸ்ரீராமலிங்கம், பரமேஸ்வரன்,பிரியா கார்த்திக் பிரபு,ஸ்ரீனிவாஸ் ஸ்ரீராமன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *