தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்துக்கு இன்றும்(மே 19), நாளையும்(மே 20) மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், மேகமலை அருவிக்கு 3 நாள்களுக்கு (மே 21 வரை) செல்வதற்கு தடை விதித்து அம்மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.