மாநில அளவிலான தடியூன்றி  தாண்டுதல்  போட்டியில் கோவை பள்ளி மாணவி தங்கப்பதக்கம்..

கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி  அஸ்வினி. இவர் ஈரோடு மாவட்டத்தில் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த மாநில அளவிலான தடியூன்றி  தாண்டுதல் போட்டியில்  19 வயதுக்கு உட்பட்ட பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று  சாதனை படைத்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவி பாராட்டி கவுரவிக்கப்பட்டார். இவர் வருகிற நவ. 26 முதல்  30ம் தேதி வரை மத்திய பிரதேசம் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில்  சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணன், தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணன்,  முதல்வர் ஜி. ஆண்டனி ராஜ், பள்ளி நிர்வாகி சாந்தினி அனீஷ் குமார், தலைமை ஆசிரியை லீனா, நிர்வாக அலுவலக அதிகாரி  உமாராணி,  உடற்கல்வி இயக்குனர் மோகன், மாணவியின்  பெற்றோர்கள் உள்ளிட்ட  பலர்  உடன் இருந்தனர்.

இதையும் படிக்க  3 ரன்களை அடித்த இளம் விக்கெட் கீப்பர்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்...

Wed Nov 13 , 2024
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்து உடனடியாக பணிகளையும் துவக்கிவைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 88 வது வார்டு, கே.ஜி.கே சாலை மற்றும், 87 வது வார்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக செங்குளம் […]
IMG WA jpg