
கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்ட சூறைக் காற்று காரணமாக, தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.மேலும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.