விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் அசோக் குமார் வழக்கறிஞரான இவர் நேற்று முன் தினம் மாலை வடக்கிபாளையம் பிரிவில் வைக்கப்பட்டு உள்ள பிளக்ஸ் பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதனை அகற்றுமாறு பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் தொலைபேசியில் பேசி உள்ளார் அப்போது உதவி கண்காணிப்பாளரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொன்டனர் இந்நிலையில் நேற்று இரவு அசோக்குமாரை பொன்னாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
மேலும் தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் கைது செய்யப்பட்டு எங்கே விசாரனை செய்து வருகின்றனர் என விசிக நிர்வாகிகள் போலிசாரிடம் கேட்டபோது சரியான பதில் கூறாததால் நிர்வாகிகள் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அசோக்குமாரிடம் விசாரனை மேற்கொண்ட போலிசார் ஜேஎம் ஒன்று நீதியியல் நடுவர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர் வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் விடுதலை சிறுத்தை தெற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.