
எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் சில மாதங்களுக்கு முன்பாக திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினா். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆலையை தாற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில் இது தொடா்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று உரத்தொழிற்ச் சாலைக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,அரசின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.