ஓகே பாஸ் (OKBOZ) செயலி அறிமுகம் – 1 ரூபாயில் டாக்சி சவாரி!
கோவையில் ஓகே பாஸ் (OKBOZ) என்ற புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலம் போக்குவரத்து, உணவு, மளிகை பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இது கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துவக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட செயலி. அதன் அறிமுக விழா ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தலைமை செயல் இயக்குனர் செந்தில், வர்த்தக மேம்பாட்டு மேலாளர் சிவசங்கர் மற்றும் விற்பனை அதிகாரி பிரதீப் குமார் செயலியை அறிமுகம் செய்தனர்.
இதன் முதல் சேவையாக, பிப்ரவரி 1 முதல் 28 வரை ஒரு ரூபாயில் டாக்சியில் பயணம் செய்ய முடியும். முதல் 2.5 கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் பெறப்படவுள்ளது. அதற்கு பிறகு வழக்கமான கட்டணம்தான் அமையும்.
இந்த செயலியில் 50 வகையான சேவைகள், வீட்டு பழு...