புத்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அனைத்து தரப்பு மக்களும் கேக் வெட்டி குதூகலமாக கொண்டாடுவது வழக்கம் பொதுமக்களை கவரும் வகையில் இனிப்பகங்களில் பல்வேறு விதமாக கேக் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பிரபலமான அமுதசுரபி பேக்கரியில் பொதுமக்களுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுடன் இணைந்து 2025 கிலோ எடை உள்ள பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 750 கிலோ முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, செர்ரி பழம், உள்ளிட்ட 15 வகையான நட்ஸ் பொருட்கள்,மற்றும் ஒயின் போன்ற பழச்சாறுகளை பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2025 கிலோ கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு பிறகு டிசம்பர் மாதம் 15ம் தேதி கேக் தயாரிப்பு பணி முழுமை பெற்று பொதுமக்களுக்கு விற்பனைக்கு செய்யப்படும் என்று கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த கேக் தயாரிப்பு பணியினை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர் பிரம்மாண்ட கேக் தயாரிப்பு பணியை கண்டு வியப்படைந்தனர்.