தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் கோவை செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது-
கோவை விமான நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலை வரவேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கோவை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம் பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போது காங்கிரஸ் நிர்வாகிகள் மயிரா ஜெயக்குமார், தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வேண்டுமென்றே என்னுடன் வந்தவர்களையும் என்னையும் தாக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையினர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அப்போது மயூரா ஜெயக்குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றார். மயூரா ஜெயக்குமாரிடம் கை துப்பாக்கி உள்ளது விமான நிலைய வாசலில் வைத்து எனக்கும் என்னுடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.