
கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி தயாராகி வருகிறது. தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க வாக்குச்சாவடி முகவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜய் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளன.இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் நிலையில், முதல் மாநாடு கோவையில் ஏப்ரல் 26ம் தேதி (நாளை) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டில் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர...