அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை சோமையனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.

WhatsApp Image at PM ()
WhatsApp Image at PM ()

சோமையனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது வருகின்றது. இப்பள்ளியில், இன்று நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், மற்றும் என்டிடிவி டாடா அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதிய கழிப்பறைகள், உயர் கல்வி பெற மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மற்றும் மலைவாழ் மக்களின் தேவைகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பள்ளியின் தலைமையாசிரியை தமிழ் செல்வி வரவேற்புரையாற்றினார். நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தரராஜ் இத்திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இதையும் படிக்க  கோவையில் தி சாம்பியன் நிகழ்ச்சி!

இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்டு அமைப்பின் நிறுவன தலைவர் சங்கரநாராயண், மாணவர்களுக்கு அளிக்கக் படும் நலத்திட்டங்களால் மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த சாதனைகளை எடுத்து கூறினார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இரவு நேரத்தில் படிப்பை தொடர சிறிய அளவிலான மின் விளக்குகளை மாணவர்களுக்கு என்டிடி டாடா அமைப்பின் இயக்குநர்கள் சிவக்குமார் சதாசிவம், மற்றும் சதீஷ் பாபு, ஆகியோர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதுவை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்...

Wed Nov 20 , 2024
புதுவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 150 பேர், தங்கள் நலன்களை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 18.11.2024 முதல் தொடங்கிய இந்த போராட்டம், இன்று (19.11.2024) இரண்டாவது நாளாக தொடர்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கே.பி.ஆர். ராஜேஸ்வரி பெருமாள்ராஜா அவர்கள், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களிடம் மனு அளித்து கைதிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை தெரிவித்தார். கைதிகள் முன்வைத்த கோரிக்கைகள்: 1. சுத்தமான குடிநீர் வழங்கல் […]
IMG WA jpg