
போப் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு புதிய போப் தேர்வு – இந்தியாவின் 4 கார்டினல்கள் வாக்களிக்க தகுதி…
கிறிஸ்தவ உலகின் உச்ச மத தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் நீண்ட கால நோய்வாய்ப்பின் பின்னர் 88 வயதில் காலமானார். இதையடுத்து, புதிய போப்பை தேர்வு செய்யும் செயற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன.கத்தோலிக்க திருச்சபையின் விதிகளின்படி, 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். தற்போது, உலகம் முழுவதும் உள்ள 252 கார்டினல்களில் 138 பேர் இந்தத் தேர்தலில் பங்கேற்க முடியும். இதில் நான்கு இந்தியர்கள் அடங்கியிருப்பது, இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.போப்பைத் தேர்ந்தெடுக்கும் மாநாடு – கான்கிளேவ் என அழைக்கப்படும் – போப்பின் மறைவுக்குப் பிந்தைய 15 முதல் 20 நாட்களுக்குள் வாடிகனில் நடைபெறும். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவரே புதிய போப்பாக தேர்வாகிறார். பொதுவாக, இந்த தேர்தல் நடைமுறை 15-20 நாட்கள் வரை நீடிக்கக்கூடும்.4 இந்திய கார்டினல்க...