கோவை விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (6) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா(8) ஆகியோர் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர். இருவரும் சறுக்கு விளையாட முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார ஒயர்கள் சேதப்பட்டு இருப்பது அங்கு வேலை செய்யும் எலக்ட்ரீஷன் சிவாவுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் குடியிருப்பின் தலைவர் என்எல் நாராயணன் கண்டு கொள்ளாததால் அந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.