
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.“கடந்த 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.“மக்களுக்கு சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத அரசை எதற்காக வைத்திருக்கிறோம்? முதல் நாள் முதல் அரசு இயங்குகிறதா என்றே...