குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

9bq94o7 delhi rain - குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத்துக்கு அதி கனமழைக் காரணமாக  சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் அம்மாவட்ட மக்களுக்கு  குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைக்கு  சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *