Friday, February 7

விவசாயம்

100 ரேசன் கடைகள் முன்பு 100 நாட்கள் போராட்டம்…

100 ரேசன் கடைகள் முன்பு 100 நாட்கள் போராட்டம்…

தமிழ்நாடு, விவசாயம்
பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் ராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் அறிவித்த 100 நாட்கள் 100 ரேஷன் கடைகளில் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரியும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணையை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூடங்களில் வினியோகிக்க கோரி அரசை வலியுறுத்தியும், கள் இறக்க போடப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும்,வேளாண் பம்பு செட்டுகளுக்கு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மும்முனை மின்சாரத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், பிஏபி பாசன திட்டத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் எதிர்வரும் நிதிநிலை அறிக்கையின் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வற்புறுத்திய...
ஆழியாறு பாசன கால்வாய்களில் கலக்கும் தென்னை நார் கழிவு நீரால்  விவசாய நிலங்கள் பாதிப்பு..

ஆழியாறு பாசன கால்வாய்களில் கலக்கும் தென்னை நார் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு..

விவசாயம்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் அப்போது கோட்டூர், ஆனைமலை, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள PAP பாசன விவசாயிகள் தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் கலப்பதால் விவசாய நிலங்கள் பாழடைந்து வருவதாக மாசடைந்த தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி சார் ஆட்சியரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் திறந்த வெளியில் தென்னை நாரை உலர வைக்க தண்ணீரை பயன்படுத்துகின்றனர் அ...
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

விவசாயம்
மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும் தென்னை சார் தொழில்களை வளரவும் ஏற்றுமதியை வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும் சென்னையில் உள்ள மண்டல தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை பொள்ளாச்சியில் அமைத்திட வேண்டும் தென்னையைத் தாக்கும் ஈரோ பைய்டு கருந்தாழை புழுக்கள் வேர்ப்புழு வெள்ளை ஈ கேரளா மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு நோய்களை கட்டுப்படுத்தகூடிய மருந்துகளையும் வழங்கிட வேண்டும். முழுமையான பயிர் காப்பீடு அனைத்து தென்னை மரங்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் செயல்படாத காயர் போர்டின் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் முழக்கமிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள...
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட நினைவு நாளில் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மரியாதை

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட நினைவு நாளில் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மரியாதை

விவசாயம்
கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ம் தேதி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்திருந்தது, அதன்படி அக்டோபர் 7ஆம் தேதியான இன்று பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. பரமக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கே.எஸ். ராவ் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத்தொடர்ந்துக...
தென்னை நார் தொழிற்சாலைகளின் கழிவு நீரால் மரங்கள் பாதிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியம்.

தென்னை நார் தொழிற்சாலைகளின் கழிவு நீரால் மரங்கள் பாதிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியம்.

விவசாயம்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண் துறை, வனத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல இடங்களில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை முறைகேடாக திருடுவதாகவும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர் மேலும் அங்கலக்குறிச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஆழியார் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு தென்னை நாரை சுத்தம் செய்து வருகின்றனர் இதனால் நிலத்தடி ந...
அணைக்கு தண்ணீர் திறக்க கோரி  விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்…

அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்…

விவசாயம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு உபரி நீரின் அளவு குறைந்தது. அதோடு அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள் திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்...
விவசாயத்துக்கு தனி மின்வழித்தடம் அமைப்பு – மின்சார வாரியம் நடவடிக்கை…

விவசாயத்துக்கு தனி மின்வழித்தடம் அமைப்பு – மின்சார வாரியம் நடவடிக்கை…

விவசாயம்
தமிழ்நாடு மின்சார வாரியம், விவசாயம் குறித்த மின்வினியோகம் செய்ய தனித்துவமான மின் வழித்தடங்களை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் மின்னழுத்த குறைவு மற்றும் மின்சாரம் வீணாகும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். மின்வாரியத்தின் அதிகாரிகளின் தகவலின்படி, இதுவரை கிராமப்புறங்களில் வீடுகள், கடைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஒரே வழித்தடத்தின் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில், விவசாய மின் இணைப்புகள் சிலர் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தியதால் மின்னழுத்த குறைவு ஏற்பட்டது. மத்திய அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6,200 மின் வழித்தடங்களில் 30% அதிக விவசாய மின்இணைப்புகள் உள்ள 1,685 வழித்தடங்களுக்கு தனி விவசாய மின் வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மின்னழுத்தம் சீராக இருக்கும். திருவண்ணாமலை (174), தஞ்சை (109), திருப்பூர் (...
மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு

மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு

விவசாயம்
ஆனைமலை அருகே நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் வரை உள்ள ஆனைமலை-உடுமலை சாலையில் ரூ. 2 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த 10 மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீர்மானித்தனர். இதனை அறிந்த பசுமை குழு மற்றும் மரங்கள் மறுநடவு நிபுணர் "கிரீன் கேர்" சையத் மற்றும் இயற்கை ஆர்வலர் மரம் மாசிலாமணி ஆகியோர் இணைந்து, வெட்ட இருந்த புங்கமரம், வேப்பமரம், ஆயமரம் உள்ளிட்ட 10 மரங்களை கிரேன் மற்றும் ஜேசிபி ஆகிய இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் இருந்து பாதுகாப்பாக அகற்றி, வேறு இடத்தில் மறுநடவு செய்தனர். மரங்களை வெட்டாமல் அவற்றை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்த செயலை மகிழ்ச்சியுடன் ஏற்ற அப்பகுதி மக்கள், சையத் மற்றும் மரம் மாசிலாமணி ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்....
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது….

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது….

விவசாயம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 15,530 கனஅடியாக குறைந்துள்ளது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, அணைக்கு வரும் நீர் வினாடிக்கு 22,601 கனஅடியிலிருந்து குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கான பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.27 அடியிலிருந்து 116.32 அடியாக உயர்ந்துள்ளது. இப்போதைய நீர் இருப்பு 87.72 டிஎம்சி (தனுகாட்டி அடி) ஆக உள்ளது....
நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 6ம் தேதிக்கு மாற்றம்….

நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 6ம் தேதிக்கு மாற்றம்….

விவசாயம்
பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை கோட்டூர் உட்பட சுற்றுப்புறத்தை சேர்ந்த உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் செப்டம்பர் 6ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு பொள்ளாச்சி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா தெரிவித்துள்ளார்....