மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்…

மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்து உடனடியாக பணிகளையும் துவக்கிவைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 88 வது வார்டு, கே.ஜி.கே சாலை மற்றும், 87 வது வார்டு குறிஞ்சி நகர் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக செங்குளம் நிறைந்து, தண்ணீர் ஊற்றெடுத்து அப்பகுதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உடனடியாக சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து ஊற்று நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக தனது சொந்த நிதியில் இருந்து பராமரிப்பு பணிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். மேலும் உடனடியாக ஜெசிபி. வாகனம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளையும் துவக்கி வைத்தார்.

மக்களுக்கு பிரச்சினை என்றவுடன் உடனடியாக களத்திற்க்கு வந்து ஆய்வு செய்து தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகளையும் துவக்கி வைத்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணிக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சர்வ மத பிரார்த்தனை...

Sun Nov 17 , 2024
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்… காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது.. சர்வ மத பிரார்த்தனையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.. இளைஞர் […]
WhatsApp Image at PM