விழுப்புரம் திரு.வி.க. நகரில்லுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் 40 முதல் 50 பத்திரப் பதிவுகள் நடைபெறும் நிலையில், கூடுதலாக பணம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திங்கள்கிழமை(மே 20) இரவு துணைக் கண்காணிப்பாளர் சத்திய ராஜ் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.இதில்,கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், பணியிலிருந்த சார்பதிவாளர் லோகநாயகி உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தினர்.மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply