
68வது தடகள போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற பள்ளி மாணவி
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமி மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா தங்கம் வென்று முதல் இடத்தையும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜானவி வெள்ளி பதக்கம் வென்று இரண...