மேட்டூர் அணையின் நீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று(ஜூன் 23) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.17 அடியிலிருந்து 40.93 அடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1500 கன அடியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 138 கன அடியிலிருந்து 140 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.57 […]
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 19-ஆம் தேதி 21 பேரும், ஜூன் 20-ஆம் தேதி 20 பேரும், 21-ஆம் தேதி 9 பேரும் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் கள்ளக்குறிச்சியிலும், ஒருவர் சேலத்திலும் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் 106 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும் என மொத்தம் 157 பேர் […]
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதுவை கள்ளச்சாராயம் குடித்து இறந்த 54 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் மற்றும் நடிகருமான விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சுமார் 114 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளையொட்டி, நாளை ஜூன் 22ஆம் தேதியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்தன.கள்ளச்சாராயம் சம்பவத்தினால், நாளை தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தவெக தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் […]
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளத நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.49 பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜுன்21) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் புதுச்சேரியில் இருந்து சாராய உற்பத்திக்கு தேவையான […]
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி […]
தூத்துக்குடியில் இன்று (ஜூன் 21) சா்வதேச யோகா தின நிகழ்ச்சி காலை 7 மணி அளவில் நடைபெற்றது. யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி 29 தேசிய மாணவர் படை நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அலுவலர் பிரதோஷ் தலைமை வகித்தார். ஜெயபிரியா யோகா பயிற்சிளித்தார்.இந்த யோகா நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி,வ.உ.சி. கல்லூரி மற்றும் பள்ளி,கல்லூரியைச் சேர்ந்த 350 […]
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர அலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை […]
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர்.தொடர்ந்து, புதன்கிழமை காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய […]
குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் தமிழக ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை கொச்சி புறப்பட்டுச் சென்ற செஞ்சி மஸ்தான், தமிழகத்தை […]