கள்ளச்சாராய மரணம் 56 ஆக உயர்வு,மேலும் முக்கிய நபர் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 19-ஆம் தேதி 21 பேரும், ஜூன் 20-ஆம் தேதி 20 பேரும், 21-ஆம் தேதி 9 பேரும் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் கள்ளக்குறிச்சியிலும், ஒருவர் சேலத்திலும் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் 106 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும் என மொத்தம் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர், சென்னையில் அவருடைய உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.



இதையும் படிக்க  "ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை ஏற்க முடியாது: தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தது இந்தியாவிற்கும் அவமானம் - தமிமூன் அன்சாரி"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு!

Sun Jun 23 , 2024
போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் முதல்முறையாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் அதிகாரிகள் கூறியதாவது:சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அந்த விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் […]
PTI05 06 2024 000075B 0 1714996922565 1714997031370 - சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு!

You May Like