
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதுவை கள்ளச்சாராயம் குடித்து இறந்த 54 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.