கள்ளச்சாராயம் விவகாரம்:மேலும் ஒரு முக்கிய நபர் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளத நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.49 பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜுன்21) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் புதுச்சேரியில் இருந்து சாராய உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களை வாங்கி வந்து வினியோகம் செய்துள்ளார்.சிபிசிஐடி போலீசாரிடம் ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பல முக்கிய நபர்கள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.இந்த வழக்கில் கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ் உள்பட 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

இதையும் படிக்க  கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.....

Fri Jun 21 , 2024
கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில்,இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி  கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தற்பொழுது ஏற்றுக்கொண்டது.1 லட்சம் ரூபாய் பிணையில் நீதிமன்றம் […]
arvind kejriwal 102122792 - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.....

You May Like