Sunday, April 27

தமிழகம் வரும் 7 பேரின் உடல்கள்!

குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் தமிழக ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை கொச்சி புறப்பட்டுச் சென்ற செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடலைப் பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், குவைத்தில் தீ விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்களா என்பது குறித்து மத்திய அமைச்சகத்திடம் தகவல்கள் கேட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

இதையும் படிக்க  காரைக்குடியில் புதிய ஏஎஸ்பியாக அனிகேத் அஷோக் பொறுப்பேற்றார்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *