தூத்துக்குடியில் இன்று (ஜூன் 21) சா்வதேச யோகா தின நிகழ்ச்சி காலை 7 மணி அளவில் நடைபெற்றது. யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி 29 தேசிய மாணவர் படை நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அலுவலர் பிரதோஷ் தலைமை வகித்தார். ஜெயபிரியா யோகா பயிற்சிளித்தார்.
இந்த யோகா நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி,வ.உ.சி. கல்லூரி மற்றும் பள்ளி,கல்லூரியைச் சேர்ந்த 350 மாணவர் மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும் இதைபோன்று பள்ளி கல்லூரிகளிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
You May Like
-
3 months ago
ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டண உயர்வு !
-
5 months ago
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு!