கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக உயர்வு! 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர்.தொடர்ந்து, புதன்கிழமை காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.கருணாபுரம், ஏமப்பேர், வீரசோழபுரம், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை உயிரிழந்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது.கள்ளச்சாரயம் விற்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க  கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாஜக பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா, கல்யாணராமன் நீக்கம்!

Thu Jun 20 , 2024
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா, அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யாவை நீக்குவதாக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய் சுரேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற மாநில மையக் கூட்டத்தில் புதன்கிழமை இந்த […]

You May Like