குடிபோதையில் சென்று டிபன் கடையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது .

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திருமணமேடு புது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா ,இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வருகிறார் .

ஹேமலதாவின் கடைக்கு தாளக்குடி பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் முரளி அடிக்கடி வருவதும் வரும்போதெல்லாம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் நேற்று இரவு ஹேமலதாவின் கடைக்கு வந்த முரளி கடையில் வேலை செய்பவர்களை பார்த்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் ,மேலும் ஹேமலதாவையும் ஒருமையில் பேசி இருசக்கர வாகனத்தை வைத்து இடிக்க முற்பட்ட பொழுது ஹேமலதாவின் தந்தை மற்றும் கடையில் வேலை செய்பவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹேமலதாவின் கணவர் வந்து முரளியிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் அப்பொழுது முரளி கடையில் வெங்காயம் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து ஹேமலதாவின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .

இந்நிலையில் அங்கு வந்த ரோந்து காவலர்களை பார்த்ததும் முரளி தன் வாகனம் மற்றும் கத்தியை அங்கே விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையும் படிக்க  குரூப் 2, 2ஏ-க்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் அவகாசம்...

தொடர்ந்து ஹேமலதா கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

முரளி மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்

Tue Oct 1 , 2024
கோவை மாவட்டம் டாடாபாத் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கோவை நாடார் சங்க கலையரங்கத்தில் தலைவர் முனைவர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எஸ் ஆர்.விமலராகவன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு 2023- 2024ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் துணைத்தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்றுப்பேசினார். எம், சந்தனபால்ராஜ், எஸ் ஆர். வாசகன் மற்றும் செயலாளர்கள் என் எல் ஜே.சபாபதி, எம். விஜயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் சி.ராஜமாணிக்கம் […]
IMG 20240930 WA0033 - கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்

You May Like