திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திருமணமேடு புது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா ,இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வருகிறார் .
ஹேமலதாவின் கடைக்கு தாளக்குடி பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் முரளி அடிக்கடி வருவதும் வரும்போதெல்லாம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று இரவு ஹேமலதாவின் கடைக்கு வந்த முரளி கடையில் வேலை செய்பவர்களை பார்த்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் ,மேலும் ஹேமலதாவையும் ஒருமையில் பேசி இருசக்கர வாகனத்தை வைத்து இடிக்க முற்பட்ட பொழுது ஹேமலதாவின் தந்தை மற்றும் கடையில் வேலை செய்பவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹேமலதாவின் கணவர் வந்து முரளியிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் அப்பொழுது முரளி கடையில் வெங்காயம் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து ஹேமலதாவின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .
இந்நிலையில் அங்கு வந்த ரோந்து காவலர்களை பார்த்ததும் முரளி தன் வாகனம் மற்றும் கத்தியை அங்கே விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
தொடர்ந்து ஹேமலதா கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
முரளி மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .
Leave a Reply