கோவை மாவட்டம் டாடாபாத் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கோவை நாடார் சங்க கலையரங்கத்தில் தலைவர் முனைவர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எஸ் ஆர்.விமலராகவன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு 2023- 2024ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
இக்கூட்டத்தில் துணைத்தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்றுப்பேசினார். எம், சந்தனபால்ராஜ், எஸ் ஆர். வாசகன் மற்றும் செயலாளர்கள் என் எல் ஜே.சபாபதி, எம். விஜயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் சி.ராஜமாணிக்கம் அவர்கள் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கினை தாக்கல் செய்தார்.
பின் உறுப்பினர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு, வரவு, செலவு கணக்குகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களும், கோவை நாடார் சங்க உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
கூட்டத்தில் சங்க தீர்மானங்களும், பொது தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக கோவை நாடார் சங்க செயலாளர் என் எல் ஜே சபாபதி நன்றி கூற சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.
Leave a Reply