
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் சுமதி என்பவருக்கு அதே அலுவலகத்தில் பணியாற்றிய அஞ்சல் ஆய்வாளர் தீபராஜன் என்பவர் பணி சுமை அதிகம் கொடுத்து அவரின் குடும்பத்தை பற்றி இழிவாக பேசியதால் மனமுடைந்த பெண் தபால் ஊழியர் சுமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சலக ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் ஆய்வாளர் பனியிட மாற்றம் செய்தால் மட்டும் போதாது அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாது தீபராஜனை கைது செய்து தண்டனை வழங்கி இறந்த பெண் அஞ்சலக ஊழியருக்கு நியாயம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோரி கருப்பு பேட்ச் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.