கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள், சூடு மண்ணால் ஆன முத்திரைகள், சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.292 கிலோ, நீளம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, மற்றும் தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாய பணியில் ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.
தொல்லியல் சூழ்நிலைகளைப் பொருத்து, இவை இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை என கணிக்கப்படுகிறது.
You May Like
-
6 months ago
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!
-
2 months ago
காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!