கணவர் மாவட்ட ஆட்சியர்,மனைவி மாநகராட்சியின் ஆணையர் என கடலூரில் கணவன் – மனைவி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Screenshot 20240724 084944 InShot - கணவர் மாவட்ட ஆட்சியர்,மனைவி மாநகராட்சியின் ஆணையர் என கடலூரில் கணவன் - மனைவி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.<br>





கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு கடந்த 19-ந்தேதி  பொறுப்பேற்றார். இவருடைய மனைவி அனு. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், அரசு துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது  கடலூர் மாநகராட்சி ஆணையராக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்-ஆணையாளர் அனு தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடலூர் மாநகராட்சியாக மாறியதற்கு பிறகு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக அனு பதவி ஏற்க உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக கணவனும், கடலூர் மாநகராட்சி ஆணையாளராகவும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிக்க  ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *