தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மத்திய அண்ணா பேருந்து நிலையம் முன் அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நகர மன்ற தலைவர் சியாமளா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நகரத்தின் 36 வார்டுகளில் திமுக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்வு கொண்டாடப்பட்டது.
அதேபோல், ஆனைமலை முக்கோணத்தில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்கம் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
Leave a Reply