- சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மே12 முதல் மே 15 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் மே 12,13 தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்ததல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Leave a Reply