பொள்ளாச்சியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 53 விநாயகர் சிலைகள் அம்பராம்பாளையம் ஆற்றில் கரைக்கப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 53 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அம்பராம்பாளையம் ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டிலுள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபம் பகுதியில் தொடங்கியதுடன், ஊர்வலம் உடுமலை ரோடு, புதிய பேருந்து நிலையம், பாலக்காடு சாலை, மீன்கரை ரோடு, ஜமீன்ஊத்துக் குளி வழியாக சென்றது.
ஊர்வலத்திற்கு இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு கண்டு மகிழ்ந்தனர். விசர்ஜனத்தை ஒட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Leave a Reply