கிருஷ்ணகிரியில் போலி என்சிசி கேம்ப் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்த சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்..
சிவராமன் பாலியல் தொல்லை வழக்கில் தன் கைது செய்வோம் என அறிந்து 16 மற்றும் 18ஆம் தேதி கைது செய்வதற்கு முன்பே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு வேண்டிள்ளார் இந்நிலையில் கைது செய்த சிவராமனை தப்பிக்க முயன்ற போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளித்திருந்தனர்..
இந்த நிலையில் அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
Leave a Reply