Friday, February 7

காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செஞ்சை பள்ளிவாசல் அருகே கவுண்டம்மன் கோவிலுக்கு பத்தடி தூரத்தில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கப்பட்ட குடோனில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதை முதலில் பார்த்த அப்பகுதியினர், தீ பரவாமல் தடுக்க உடனடியாக செயல்பட்டனர்.

காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!
காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!

தீயின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கிய போது, அங்கு இருந்த இளைஞர்கள் விரைவாக ஒன்று கூடி, யாருக்கும் எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படாமல், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!
காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!
காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!

தீயை அணைக்க சிறிது சிரமம் ஏற்பட்டாலும், இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த அசாதாரண செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வினால் அந்த குடோனில் இருந்த பொருட்களும், அருகிலிருந்த வீடுகளும் பாதிக்கப்படாமல் மீட்கப்பட்டன.

காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!
காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!
காரைக்குடியில் பிளாஸ்டிக் குடோனில் தீ!
இதையும் படிக்க  விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி ஊழியர் உயிரிழப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *