குஜராத் மாநிலம்,  பொய்ச்சா பகுதியில் நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.செவ்வாய்க்கிழமை காலை சூரத்தில் இருந்து வந்த இவர்கள் நர்மாத நதியில் குளித்துள்ளனர்.அப்போது திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த அதிகாரிகள் காணாமல் போன ஏழு பேரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.தற்போது, தேசிய […]

டெல்லியில் மக்களவைத் தோ்தலில் களம் காணும் பெரிய கட்சிகள், வாக்காளா்களைக் கவர போட்டி போட்டுக் கொண்டு உத்தரவாதங்களை அளித்துள்ளன. ஏழு கட்ட மக்களவைத் தோ்தலில் ஆறாம் கட்ட வாக்குப் பதிவை மே 25-ஆம் தேதி டெல்லி எதிா்கொள்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்து. களத்தில் 162 வேட்பாளா்கள் உள்ளனா்.இந்தத் தோ்தல் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜக தனித்து களம் காண்கிறது. மறுபுறம் மூன்று தொகுதிகளில் காங்கிரஸும், […]

மும்பையில்  கடுமையான புழுதிப் புயல் வீசி வருகின்றது. புழுதிப் புயலுடன் கூடிய மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலமாக சூறைக்காற்றும் வீசியது.40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், பலமாக வீசிய சூறைக்காற்றில் செட்டாநகர் சந்திப்பில் கட்கோபார் பகுதியில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த […]

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் மே 13 நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆந்திரத்தில் பேரவைத் தோ்தலுடன் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெற்ற நிலையில், அந்த மாநிலங்களின் சில இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறைச் சம்பவங்களாக மாறின.திங்கள்கிழமை நடைபெற்ற நான்காம் […]

உத்தர பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடி இன்று  (மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.வாரணாசி மக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.வாரணாசியில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலின்போது (ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறயுள்ளது. 2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81  லட்சம் வாக்குகளை பெற்றாா் என்பது குறிப்பிடதக்கது.

மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.96 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் 32.78%, குறைந்தபட்சமாக ஜம்மு – காஷ்மீரில் 14.94% வாக்குகள் பதிவாகியுள்ளது.பிற மாநிலங்கள், 11 மணி நிலவரம்,ஆந்திரம் – 23.10%;பிகார் – 22.54%;ஜார்கண்ட் – 27.40%;மத்திய பிரதேசம் – […]

மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக  22 தனித் தொகுதிகள் உள்பட 96 தொகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,காலை 9 மணி நிலவரப்படி, சுமார் 10.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரத்தில் 9.05 சதவிகிதமும், பிகாரில் 10.18 சதவிகிதமும், ஜம்மு-காஷ்மீரில் 5.07 சதவிகிதமும், ஜாா்க்கண்ட்டில் 11.78 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.மத்திய பிரதேசத்தில் 14.97 சதவிகிதமும், மகாராஷ்டிரத்தில் 6.45 சதவிகிதமும், ஒடிசாவில் 9.23 சதவிகிதமும், […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் பள்ளிகளுக்கு விரைந்து சென்று  அனைவரையும் வெளியேற்றினர். பள்ளி முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.மறுபக்கம், மின்னஞ்சல் முகவரி யாருடையது, எங்கிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாடு முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என பொதுவிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் […]

நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயகக் கடமைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் தொடங்குவதால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிக வாக்குப்பதிவைக் கோருகின்றனர். ஒவைசி மற்றும் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், வாக்குப்பதிவு தெலுங்கானா வரை நீண்டுள்ளது. இதுவரை 283 இடங்களில் சுமூகமான […]

மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவுடன் ஆந்திரம் மற்றும் ஒடிஸா பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கியது.ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் குடும்பத்தினருடன் வாக்குகளை செலுத்தினர்.நான்காம் கட்ட தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 92 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. பாஜக 70, காங்கிரஸ் 61 மற்றும் ஓய்எஸ்ஆர் கட்சி 25 இடங்களிலும் போட்டியிடுகிறது. […]