மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவுடன் ஆந்திரம் மற்றும் ஒடிஸா பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கியது.ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் குடும்பத்தினருடன் வாக்குகளை செலுத்தினர்.நான்காம் கட்ட தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 92 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. பாஜக 70, காங்கிரஸ் 61 மற்றும் ஓய்எஸ்ஆர் கட்சி 25 இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவெண்டுலா தொகுதியிலும்,அமராவதியில் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ச்சியாக மாலை 6 மணி வரை நடைபெறும். சில இடங்களில் மட்டும் 1 அல்லது 2 மணி நேரம் முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 அன்று நடைபெறயுள்ளது.
Leave a Reply