
மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக 22 தனித் தொகுதிகள் உள்பட 96 தொகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,காலை 9 மணி நிலவரப்படி, சுமார் 10.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரத்தில் 9.05 சதவிகிதமும், பிகாரில் 10.18 சதவிகிதமும், ஜம்மு-காஷ்மீரில் 5.07 சதவிகிதமும், ஜாா்க்கண்ட்டில் 11.78 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் 14.97 சதவிகிதமும், மகாராஷ்டிரத்தில் 6.45 சதவிகிதமும், ஒடிசாவில் 9.23 சதவிகிதமும், தெலுங்கானாவில் 9.51 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.உத்தர பிரதேசத்தில் 11.67 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 15.24 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.