4ஆம் கட்ட மக்களவை தேர்தல்;67% வாக்குப் பதிவு

1e532c6a4fd9ca2c03ff1b267c282ef2 - 4ஆம் கட்ட மக்களவை தேர்தல்;67% வாக்குப் பதிவு

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் மே 13 நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆந்திரத்தில் பேரவைத் தோ்தலுடன் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெற்ற நிலையில், அந்த மாநிலங்களின் சில இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறைச் சம்பவங்களாக மாறின.திங்கள்கிழமை நடைபெற்ற நான்காம் கட்டத் தோ்தலுக்கு பிறகு, நாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்த தொகுதிகளின் எண்ணிக்கை 379-ஆக உயா்ந்தது. மீதமுள்ள 164 தொகுதிகளுக்கு மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க  பிரதமர் மோடி இன்று பிரசாரம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *