எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்கால தடை!

நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு வெறும் ரூ.95 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி, எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும், காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க  திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு .<br>

Fri Jul 19 , 2024
திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது தாய் பிரபாவதியுடன் உறையூர் குழுமணி சாலையில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன மோதி சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார். […]
IMG 20240719 WA0005 - இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு .<br>

You May Like