Monday, July 14

தொழிற்சாலை மூடல்: 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டனம்

செயற்கை பிரச்சினையால் தொழிற்சாலை மூடல்: 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த CKPL ஸ்டீல் மற்றும் அசோக் மேக்னடிக் தொழிற்சாலைகள், தனியார் வங்கி மற்றும் நிறுவனத்தாருக்கு இடையேயான நிதி பிரச்சனை காரணமாக மூடும் நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, தொழிற்சாலையின் ஒன்றிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஐந்து நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியின் முதற்கட்டமாக, இன்று தொழிற்சாலை வாசலில் பட்டை ராமம் அணிந்து கொண்டு, சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் தனியார் வங்கியின் நடவடிக்கைகளை கண்டித்து குரல் எழுப்பினர்.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், தனியார் வங்கிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

 
இதையும் படிக்க  அம்மா உணவகங்களுக்கு 21 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *