திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா…

IMG 20240913 WA0070 - திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா...

திருச்சியில், போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மஹாலில், திருச்சி மாவட்ட தலைவரும், மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் மற்றும் கிளைச் செயலாளர் அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினர், மேலும் சமுதாயப் போராளி தேக்கமலை கோரிக்கைகள் குறித்து விளக்கமாக உரையாற்றினார்.

img 20240913 wa00673207746722270001151 - திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா...

இந்நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவர் ராஜ், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

img 20240913 wa00693818365232987779558 - திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா...

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, நிர்வாகிகளை வாழ்த்தி, போயர் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், நல வாரியம் அமைக்கும் முயற்சி பரிசீலிக்கப்படும் என்றும், சங்க நிர்வாகிகளை முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்.

இதையும் படிக்க  சார்பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை!
img 20240913 wa00681072760718096577698 - திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா...

விழாவில் மேலும் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர திமுக செயலாளர், மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்துச்செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மற்றும் காஜாமலை பகுதி திமுக செயலாளர், கவுன்சிலர் காஜாமலை விஜய் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *