திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார்.
இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது
தாய் பிரபாவதியுடன் உறையூர் குழுமணி சாலையில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன மோதி சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார்.
குழந்தையை மீட்டு குழுமணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சுபஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குழுமணி பஸ் நிறுத்தம் அருகே குழந்தை சுபஸ்ரீ உயிருக்கு காரணமாக இருந்த இருசக்கர வாகன ஒட்டியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்பு அங்கு வந்த தாசில்தார் தமிழ்செல்வன் விபத்துக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு .
Follow Us
Recent Posts
-
“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”
-
“ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை ஏற்க முடியாது: தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தது இந்தியாவிற்கும் அவமானம் – தமிமூன் அன்சாரி”
-
ரயில்வே போராட்டத்தில் உயிர்நீத்த 17 ஊழியர்களுக்கு செவ்வணக்கம்: பழைய ஓய்வூதியம் மீட்பு கோரிக்கையுடன் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
மீளாது விழா: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் 400 பேருக்கு உணவு வழங்கல்!
-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Leave a Reply