பொள்ளாச்சியில் தாமரைக்குளம் அருகே கார் மோதி விபத்து: ஒருவர் பலி, ஆறு பேர் காயம் !

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவின் நான்கு வழிச்சாலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற ஒரு சொகுசு கார், தாமரைக்குளம் அருகே முன்போன மூன்று இருசக்கர வாகனங்களை மோதியது. இந்த விபத்தில், ஒருவரை உயிரிழந்த நிலையில்,ஆறு பேர் கடுமையாக காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தால், கோவை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து மிகுந்த இடையூறுக்கு உள்ளானது. கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். விபத்து தொடர்பாக, கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க  சாலையோர வியாபாரிகள் மடிப்பிச்சை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 60வது ஆண்டு விழா ...

Sat Aug 31 , 2024
கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கான பல்வேறு திறமைகளைக் கணிசமாக வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் மாணவர்கள் தங்களது படைப்புத்திறனையும், கலைநயத்தையும் பறைசாற்றும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களை செதுக்குதல் போன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்களை செதுக்கி, மாணவர்கள் சுவாரஸ்யமான உருவங்களை உருவாக்கினர். ஒரு […]
IMG 20240831 WA0028 | கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 60வது ஆண்டு விழா ...